August 30, 2017
தண்டோரா குழு
துருவங்கள் 16 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படம் நரகாசுரன்.
கெளதம் மேனன் தயாரிக்க உள்ள இப்படத்தில் அர்விந்த் சாமி மற்றும் ஒரு இளம் நடிகர் நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நரகாசுரன் படத்தில் படத்தில் மீசையை முறுக்கு படத்தில் நடித்த ஆத்மி்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கார்த்திக் நரேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.