March 9, 2018
தண்டோரா குழு
2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “நாடோடிகள்’.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ‘நாடோடிகள் – 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தின் நாயகியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடிக்கவுள்ளார்கள்.