July 14, 2017 தண்டோரா குழு
தமிழக அரசின் திரைப்பட விருதில் நான் மாகன் அல்ல படத்திற்கு விருது கிடைக்காததற்கு இயக்குனர் சுசீந்திரன் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் 6 ஆண்டுகளுக்கான மாநிலத் திரைப்பட விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன், தன்னுடைய படங்களை எந்த விருந்திற்கு தேர்வு செய்யாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் திரை உலகிற்கு விருதுகளை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இதில் என்னுடைய படங்களை எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு, தேர்வு குழுவினருக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக தேசிய விருது பெற்ற அழகர்சாமியின் குதிரை’ மற்றும் அனைவராலும் பாராட்டைப் பெற்ற ‘நான் மகான் அல்ல’ கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிக்காக ஸ்டண்ட் மாஸ்டர் ‘அனல் அரசு’-ஐ தேர்வு செய்யாதது (வந்தே மாதிரம் எனும் படத்தை தேர்வு செய்துள்ளனர் ) எனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விருதுகள் பெறவிருக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.