October 26, 2017
tamil.samayam.com
2.0 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், துபாயில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக இயக்குனர் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.O. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.
முன்னதாக எந்திரன் இரண்டாம் பாகத்தின் மேக்கிங் வீடியோக்கள், அக்ஷயை் குமாருடன் ரோபோ எதிர்கொள்ளுதல், எமிஜாக்சனின் பிகினி உடை ஸ்டில் போன்றவற்றை லைக்கா தயாரிப்பும் இயக்குனர் ஷங்கரும் வெளியிட்டனர்.
இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியது.