January 19, 2019
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பரியேரும் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதிர், காமெடி நடிகர் யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.