தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. சமீபத்தில் #METOO புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
இவர் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக மீ டூ என்ற பெயரில் குரல் கொடுத்தும் வருகிறார். இவரை டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 1.02 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஒருவர் சின்மயியிடம் ஆடையில்லா புகைப்படத்தை அனுப்புமாறு மெசேஜ் அனுப்பியுள்ளார். எனினும், எனக்கு பிடித்த நிர்வாண புகைப்படங்கள் என்று கூறி லிப்ஸ்டிக்கை சின்மயி பதிவிட்டுள்ளார்.
அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்படியே வெளியிட்டு இதை நகைச்சுவையாகவும் அவர் பதிவிட்டுள்ளார். சின்மயி கொடுத்த இந்த பதிலை வரவேற்று சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சரியான பதிலடி என கூறி வருகின்றனர். இதற்கிடையில், சின்மயியிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பிய அந்த நெட்டிசன் தன்னை அம்பலப்படுத்தியதால் சமூகவலைதளத்தை விட்டே வெளியேறியுள்ளதாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது