March 24, 2018
தண்டோரா குழு
பிரபல பாலிவுட் நடிகர் அணில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் ‘சாவரியா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ஹிந்தியில் அறிமுகமானார்.
அதன்பின், ‘டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், மௌசம், ராஞ்சனா, நீர்ஜா, பிரேம் ரதன் தன் பாயோ’ போன்ற பல படங்களில் சோனம் கபூர் நடித்தார். இதில், ராஞ்சனா படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். கடைசியாக அக்சய் குமாருடன் இணைந்து ‘பேட்மேன் படத்தில் நடித்தார்.சோனம் கபூர் கைவசம் ‘ஏக் லடுகி கோ தேகா தூ ஐசா லகா, சஞ்சு, சோயா ஃபேக்டர், வீரே டி வெட்டிங்’ ஆகிய 4 படங்கள் உள்ளது.
இந்நிலையில், சோனம் கபூருக்கும் அவரது நீண்ட நாள் காதலரான ஆனந்த் அஹுஜாவிற்கும் வருகிற மே 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெனிவா நாட்டில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.