October 21, 2017
tamil.samayam.com
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக கட்சி கூறியதற்கு அஜித் ரசிகர்களும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தடைகள் பலவற்றைக் கடந்து மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். பாஜகவின் கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.