June 29, 2018
தண்டோரா குழு
பாபி சிம்ஹா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால்,பாபி சிம்ஹாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.‘அக்னி தேவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ளளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படபூஜை கோவையில் நடைப்பெற்றது.விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் நடிகை மதுபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.