January 27, 2017
tamilsamayam.com
தெரு நாய்கள் கடித்ததில் பாலிவுட் நடிகை பருல் யாதவ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனுஷ் நடித்த டிரீம்ஸ் உட்பட பல்வேறு தென்னிந்திய படங்களில் நடித்தவர் மும்பையைச் சேர்ந்த நடிகை பருல் யாதவ்.சினிமா வாய்ப்புகள் சரி வர இல்லாததால்,மாடலிங் செய்து கொண்டு,ஹிந்தி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மும்பையில் தன்னுடைய வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் பருல் யாதவ் தெருவில் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது அந்த தெருவில் சுற்றித் திரியும் சில நாய்கள்,பருல் யாதவின் நாயை தாக்க முயன்றுள்ளன.இதனை பருல் யாதவ் தடுக்க முயன்றுள்ளார்.இதனால் ஆக்ரோஷமடைந்த தெரு நாய்கள்,பருல் யாதவை கடித்துக் குதறியுள்ளன.இதில் அவரின் முகம் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
பருல் யாதவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர்,தெரு நாய்களை விரட்டியுள்ளனர்.இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.