December 8, 2018
தண்டோரா குழு
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தது வெற்றிப்படங்களை கொடுத்தார்.
தற்போது பாலிவுட்டில் பிர்சா முன்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளார். இதற்கிடையில், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று பா.ரஞ்சித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்குகிறார். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைக்கிறார்.