July 24, 2018
kalakkalcinema.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றிய பேச்சு தற்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.நடிகர் பிரபுவும் நேற்று நடந்த சாமி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிக் பாஸ் பற்றி பேசியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம்,கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,சூரி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.இதில் நடிகர் பிரபுவும் கலந்து கொண்டார்.
அப்போது பிரபு பேசும் போது பிக் பாஸ்-ல என்னோட ஒட்டு உமா ரியாஸ்கான் மகன் ஷாரிக்கு தான் என கூறியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் உமா ரியாஸ்கான் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.