November 9, 2017
தண்டோரா குழு
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பிரியன்(55) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குநர் k.S.அதியமான் இயக்கிய தொட்டச்சிணுங்கி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.அதன் பிறகு இயக்குனர் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் பணியாற்றியுள்ளார்.இயக்குனர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆன இவர் தமிழ்,சாமி,கோவில் அருள், ஐயா,சேவல்,பூஜை,ஆறு,சிங்கம்,சிங்கம் 1, சிங்கம் 2 உட்பட 13 படங்களில் ஒளிப்பதிவாளராக இயக்குனர் ஹரியுடன் பணியாற்றியுள்ளார்.இயக்குனர் ஹரியின் சாமி 2 படத்தின் ஒளிப்பதிவாளர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.