உலகின் சிறந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஹாலிவுட் பிரபல நடிகரும் குங் பூ கலையில் வல்லவருமான புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுகிறது.
இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் ” லிட்டில் டிராகன் ” என்ற தலைப்பில் இயக்க இருக்கிறார். இப்படத்தை “புரூஸ் லீ என்டர்டைன்மெண்ட்” நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவன உரிமையாளரும் புரூஸ் லீ யின் மகளுமான ஷானான் லீ அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில்,அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவரும் பாலிவுட்டின் மற்றொரு பிரபல இயக்குனரான ராம் கோபால்வர்மா சர்ச்சையான தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், புரூஸ் லீயின் பக்தனான எனக்கு தான் அவரைப் பற்றி நன்றாக தெரியும், என்னால் மட்டும் தான் படத்தை முழுமையாக எடுக்க முடியும் என கூறியுள்ளார்.
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்
திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
3வது இந்தியா ஐடிஎம்இ விருதுகள் 2025: விருதை வெல்ல ஜவுளி துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை!