March 22, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத் முன்னணி நடிகர்களானஅஜீத், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார்.
அடுத்ததாக தனது நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்குஇசையமைக்கவுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக இருந்தாலும் அவ்வபோது ஒரு சில காட்சிகளுக்கு திரையிலும் தோன்றி வந்தார்.
இதற்கிடையில், இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும்,இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். புகைப்படத்தில் இருப்பதுஅனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால்தான், நம்மால் அதனை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அப்படியே அச்சு அசலாக பெண் போல காட்சியளிக்கிறார் அனிருத்.