February 15, 2018
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் கோயம்புத்துரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் குறைந்த விலையில் நேப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து உலக அளவில் பிரபலமடைந்தார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் ‘பேட்மேன்’ படம். இப்படத்தில், அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தற்போது இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தினை தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.இப்படத்தை ‘கொலம்பியா பிக்சர்ஸ்’ தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.