October 12, 2017
தண்டோரா குழு
மிலிண்ட் எழுதி இயக்கியுள்ள படம் அவள். இது ஒரு ஹாரர் திரைப்படம். சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.
இந்நிலையில் ஆண்ட்ரியா தான் இப்படத்தை பார்க்க போவதில்லை என்றும், பேய் படங்கள் என்றாலே தமக்கு பயம் என்றும் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் காரணம் அதுவில்லையாம். படத்தில் நிறைய 18 முத்தக்காட்சிகள் உள்ளது. அதனால் தான் படத்தை காண ஆண்ட்ரியா தயங்குகின்றார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.