February 5, 2018
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தற்போது அரவிந்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, பகத் பாசில் ஆகியோர்களை இணைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்காக சிம்பு கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து வரும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் போலீசாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக பகத் பாசில் படத்தில் இருந்து விலகி கொள்வதாக கூறப்படுகிறது, ஆனால் படக்குழுவில் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.