December 6, 2017
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் சில தினங்களுக்கு முன் தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக கூறப்பட்டது.மதம் தான் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில், தற்போது ஹுசைன் என்பவரை வீட்டை எதிர்த்து மணிமேகலை திருமணம் செய்துள்ளார்.
மேலும், மதம் முக்கியமில்லை,மனமிருந்தால் போதும் என்று தன் திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் மணிமேகலை பகிர்ந்துள்ளார்.