March 16, 2018
தண்டோரா குழு
மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் ‘மாரி–2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இன்று முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதால் போராட்டம் முடிந்த பிறகு ‘மாரி-2’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். தற்போது வரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. மேலும் படத்தை இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.