May 16, 2018
தண்டோரா குழு
கடந்த 2015-ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. இப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் ‘மாரி 2 உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்து வருகிறார். அதைபோல் கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும்,மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகி இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சாய் பல்லவி ‘அராத்து ஆனந்தி’ என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சாய் பல்லவி ஆட்டோ ஓட்டி பழகி வருகிறாராம்.