March 19, 2018
தண்டோரா குழு
துப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் வேலையை துவங்கிவிட்டார். மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் சாந்தனு, நித்யா மேனன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்என்று தகவல்கள் தெரிவிக்கிறது.