June 16, 2018
தண்டோரா குழு
மாதவன்,விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் “விக்ரம் வேதா”.ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.அப்படத்தில் வரும் யாஞ்சி யாஞ்சி பாடலில் இவர்களது கெமிஸ்ட்ரி மக்களுக்கு பிடித்து போனதால்,தற்போது மாதவன் நடிக்கும் அடுத்த படமான ‘மாறா’ என்னும் ரொமான்டிக் படத்திலும் இவரையே நாயகியாக கமிட் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தினை ‘கல்கி’ என்னும் குறும்படத்தினை இயக்கிய திலீப் குமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.