June 3, 2017
தண்டோரா குழு
2001ஆம் ஆண்டிலேயே ரூ.20 கோடி பட்ஜெட்டில் கமலின் மாறுபட்ட நடிப்பில் கடந்த தயாரிக்கப்பட்ட படம் ‘ஆளவந்தான். இந்த படத்தின் பட்ஜெட் தற்போதைய மதிப்பில் ரூ.400 கோடி என்று கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் வசூலில் வெற்றியடையவில்லை என்றாலும், இந்த வித்யாசமான முயற்சியை அனைவராலும் பெரியளவில் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தை தற்போதைய தலைமுறையினர் பார்க்க வேண்டும் என்பதற்காக தாணு இதனை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகள் இன்று துவங்குகிறது.
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விரைவில் தமிழகம் முழுவதும் இந்த படம் 500 திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தாணு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.