October 23, 2017
tamil.samayam.com
கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் பல்வேறு சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பாராட்டி நடிகர் ரஜினி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மிக முக்கிய பிரச்சனையைப் படத்தில் பேசியுள்ளார்கள், சிறப்பாக உள்ளது! மெர்சல் படக்குழுவிற்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான கருத்துகளுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பல்வேறு தரப்பினரும் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினி மெர்சலைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.