May 18, 2018
தண்டோரா குழு
தேவி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த பிரபுதேவாவுக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் குவிகின்றன.எனவே படம் இயக்குவதை சற்று நிறுத்திவிட்டு,நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் குலேபகவாலி,மெர்குரி படங்களும் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.இந்நிலையில்,பிரபு தேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜபக்ஸ் மூவீஸ்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் அப்படத்தை முகில் இயக்கவுள்ளார்.குடும்ப மற்றும் ஆக்சன் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் பிரபு தேவா முதல் முறையாக போலீசார் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.