July 5, 2018
தண்டோரா குழு
போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.தற்போது,வரலட்சுமி விஷாலின் சண்டக்கோழி-2,விஜய்யின் சர்க்கார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்,புதிய படத்தில் நடிக்க வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஜே.கே இயக்குகிறார்.சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில் வரலட்சுமி முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.மேலும், பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும்,மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.