June 15, 2017
தண்டோரா குழு
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’.
முதல்பாகத்தில் மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகை கஜோல், முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மும்பையில் பிரமாண்டமாக நடந்த படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுமட்டுன்றி ரஜினியின் நெருங்கிய நண்பரான பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
இதன்மூலம், இந்திய அளவில் தன்னுடைய விஐபி 2 படத்தைத் திரும்பிப் பார்க்கவைக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.