April 18, 2018
தண்டோரா குழு
இயக்குநர் நவீன் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு படம் மூடர் கூடம்.காமெடி கலந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நவீன் சமுத்திரக்கனி மற்றும் சங்கவி நடிக்கும் கொளஞ்சி படத்தை தயாரித்து வரும் இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இந்நிலையில்,இயக்குநர் நவீன் அடுத்ததாக விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்துள்ளார்.ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தை அம்மா கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.மேலும்,இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.