August 25, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் கமல்ஹாசன் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியாக உறையாற்றுவார்.
அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவை பிக் பாஸ் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் மேடையில் உள்ள ஆடியன்ஸ் எல்லோரும் மகத் மற்றும் ஐஸ்வர்யாவை கண்டிக்குமாறு கமலிடம் கூறுகின்றனர். இதற்கு கமல் மெனு குடுத்துட்டீங்கள்ல! இனிமே சமையல் தான்! தாளிச்சிடலாம் அவங்கள! என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.