October 16, 2017
தண்டோரா குழு
விரைவில் வெளியாகும் விஜய்யின் மெர்சல் குறித்து தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அட்லி இயக்கி மூன்று வேடத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. சமந்தா, காஜல், நித்யா மேனன் 3 நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களையும் தாண்டி மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்துக்கான புக்கிங் இன்று துவங்கியது.
இந்நிலையில் மெர்சல் படம் வெளியாகும் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என பிரபல தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்தனர். ஆனால், தற்போது மெர்சல் படத்தை மூன்று நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.