June 4, 2018 தண்டோரா குழு
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது.தமிழில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில்,ஆரவ் வெற்றி பெற்றார்.
கடந்த வருடத்தில் இருந்து,தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது ‘பிக் பாஸ்’.100 நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் விதிமுறை.
தமிழில் இந்த வருடமும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.ஜூன் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கவுள்ள தெலுங்கு பிக் பாஸ் இரண்டாம் சீசனை நானி தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மலையாளத்தில் ‘ஏசியா நெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தொகுத்து வழங்கவுள்ளார்.இதற்கான டீசர் கடந்த மாதம் வெளியானது.தற்போது வரும் ஜூன் 24ம் தேதி மலையாள பிக் பாஸ் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெகு விரைவில் இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படுமாம்.