May 20, 2017
தண்டோரா குழு
அமீர்கான் தயாரித்து நடித்த தங்கல் படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வணிக ரீதியில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இப்படத்தின் மூலம் அமீர் கானுக்கு உலகம் முழுதிலும் இருந்து ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.
சமீபத்தில் தங்கல் படம் சீனாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அமீர்கான் சீனாவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கிடையில்,சீன சமூக வலைதளம் ஒன்றில் அமீர்கானைப் பின் தொடர்வதாக 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் சீனாவில் உள்ள வலைதள பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் அதிகம் பேர் பின்தொடர்ந்த இந்தியர் என்ற பெயரை பிரதமர் நரேந்திர மோடிதான் பெற்றிருந்தார். தற்போது அதை விட அதிகம் பேரை ஈர்த்து அமீர்கான் மோடியை மிஞ்சியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.