October 30, 2017
tamil.samayam.com
நடிகர் அஜித் இதுவரையிலும் குறைந்தது ஐந்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பண உதவி செய்துள்ளதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நாயகனாக திகழ்பவர் நடிகர் அஜித். நடிப்பை விட இவரது குணத்துக்கே பல ரசிகர்கள் இவருக்கு உண்டு. இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ள ராதாரவி, அவர்தான் நிஜ ஹீரோ என்று புகழ்ந்து பாரட்டியுள்ளார்.
விளம்பரத்திற்காக சேவை செய்யும் நடிகர்களின் மத்தியில் நடிகர் அஜித் தேடிச் சென்று உதவுவதால் தான், மக்கள் அவரை அஜித் சார் என்று அழைப்பதாக கூறிய ராதாரவி, நடிகர் அஜித் இதுவரை யாருக்கும் தெரியாமலேயே ஐந்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை உதவி செய்துள்ளதாக கூறினார்.
எனவே நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ரியல் ஹீரோ என்றால் அது அஜித்தாக மட்டுமே இருக்க முடியும் என்று பாரட்டியுள்ளார்.