May 11, 2017
தண்டோரா குழு
விஜய் செய்த வினையால் இந்து மதத்தை புண்படுத்தியதாக கூறி விஜய் மீது சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் விஜயின் புதிய படத்தின் போஸ்டர் என்று ஒரு புகைப்படத்தை சேர் செய்து வருகின்றனர். அதில், ஷூ அணிந்த விஜய் திரிசூலத்தை கையில் வைத்து நடனமாடுவது போல் உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், இந்த புகைப்படம் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இந்து முன்னணி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் செய்த ஆர்வக்கோளாறால் விஜய்க்கு பெரிய அவமானம் நேர்ந்துள்ளது.