February 27, 2018
தண்டோரா குழு
அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயர், கொடி ஆகியவை அறிவிக்கவுள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.இயக்குநர் சங்கரின் 2.0. படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்மான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில்,தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே விஜய்சேதுபதி விக்ரம் வேதா படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.