January 16, 2019
தண்டோரா குழு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் பேட்ட. இப்படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில், ரஜினி அடுத்ததாக ஏ ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சமூக, அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து உருவாகவுள்ளது.
இந்த மாத இறுதி வாரத்தில் படத்தின் படபிடிப்பைத் துவங்க, ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். ரஜினியின் அடுத்தப்படுத்துக்கு நாற்காலி என பெயர் சூட்ட, ஏ.ஆர்.முருகதாஸ் முடிவெடுத்திருப்பதாகக் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், தன் அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை வதந்திகளை பரப்ப வேண்டாம் என இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.