May 25, 2017
தண்டோரா குழு
சங்கரின் ‘2.0’ படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் ‘காலா’.பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று காலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களுக்கு மேலுமொரு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதமாக ‘காலா’ படக்குழுவினர்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றே வெளியாகும் என அறிவித்தனர்.
இதையடுத்து, இன்று மாலை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் காலா படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.