May 17, 2017
tamilsamayam.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் ஆசையில் இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் ஏமாந்து போவீர்கள், என பேசினார்.
இதன்பின் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் மத்தியிலும் ,அரசியல் , திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக நடிகர் மாதவன் கூறுகையில்,’‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்படுகிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு நல்லது எது என நன்றாக தெரியும். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது. அவர் முடிவை நான் வரவேற்கிறேன்’’ என்றார்.