June 4, 2018
தண்டோரா குழு
அரசியலுக்கு கமல் அல்லது ரஜினி என யார் வந்தாலும் நல்லது செய்தால் ஆதரிப்போம் என நடிகை ஷகிலா தெரிவித்து உள்ளார்.
கோவையை அடுத்த நீலாம்பூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா கலந்து கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தெலுங்கில் தற்போது ஒரு படம் வெளிவர உள்ளதாகவும்,தமிழில் மூன்று படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறினார்.அப்போது,கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்து உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,அரசியலுக்கு யார் வந்தாலும் நல்லது செய்தால் ஆதரிப்போம் என கூறினார்.