February 28, 2019
தண்டோரா குழு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தாக ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கான தேர்வு விரைவில் துவங்க உள்ளது.
இப்படத்தின் முதல்கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
ஒரே கட்டமாக படத்தை முடிக்க ஏ ஆர். முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.