• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்

November 9, 2019 தண்டோரா குழு

உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்?’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார் . வரும் டிசம்பர் முதல் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, படித்த மற்றும் ஆளுமைமிக்க பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்களின் அறிவுக்கேற்ற நிகழ்ச்சியாகவும் இருக்கும் என சேனல் தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில்,இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள ராதிகாவுக்கு, அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏனென்றால், இந்தியில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை அமிதாப் பச்சன்தான் தொடர்ச்சியாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து அமிதாப் பச்சன் பேசியுள்ள வீடியோவில்,

“ராதிகாவுக்கு வணக்கம், அமிதாப் பச்சன் பேசுகிறேன். ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி மூலம் உங்களோடு உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படங்களில் ஒரு சக நடிகனாக உங்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறீர்கள் என்பதையும் தாண்டி, உங்களை வாழ்த்த பல காரணங்கள் உள்ளன. `கோன் பனேகா குரோர்பதி’யின் வரலாற்றில், நீங்கள்தான் முதல் பெண் தொகுப்பாளராக இருக்கப் போகிறீர்கள்.இது வெறும் இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் `கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கு பெறக்கூடிய இந்நிகழ்ச்சி, தனித்துவமானது மட்டுமல்ல, பாராட்டுதலுக்கும் உரியது.

இது நிச்சயமாகப் பெண்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். உங்களுக்கும், ‘கோடீஸ்வரி’யின் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். ராதிகா, உங்கள் வாழ்க்கையில் இப்போது இருப்பதைப் போல எப்போதும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துகள். மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க