October 7, 2017
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராகவும் மாபெரும் ரசிகர்கள் வட்டத்தையும் கொண்டிருப்பவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றும் விடும் என்பது அனைவருமே அறிந்தது தான்.
அதே போல் தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்திலும் தனது திறமையை காட்டி வருபவர் சுந்தர்.சி, இவர் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவை வைத்து மிக பிரம்மாண்டமாக சங்கமித்ரா படத்தை உருவாக்க உள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் தளபதி விஜயிடம் தான் பேச்சு வார்த்தை நடந்துள்ளது, கதையை கேட்ட தளபதி இது கதாநாயகியை சார்ந்த கதை என்பதால் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.காரணம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாது என்பது தானாம்.