June 12, 2017
tamilsamayam.com
ரோபோ ரஜினிக்கும், ரோபோ எமிக்கும் உண்டான காதல்தான் ‘2.0’ படத்தின் கதையாம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ‘2.0’. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
‘எந்திரன்’ படத்தில், ஒரு ரஜினி விஞ்ஞானியாகவும், அவர் உருவாக்கிய ரோபோ இன்னொரு ரஜினியாகவும் நடித்திருப்பார். . மனித உணர்ச்சிகளை தெரிந்து கொண்ட ரோபோ ரஜினி, ஹீரோயினான ஐஸ்வர்யா ராயைக் காதலிப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்.
ஆனால், நேற்று லீக்கான ‘2.0’ படத்தின் போட்டோவைப் பார்க்கும்போது, எமி ஜாக்சனும் ஒரு ரோபோவாக நடித்திருப்பதாக தோன்றுகிறது. அப்படியானால், ரோபோவுக்கும் ரோபோவுக்கும் இடையிலான காதல் தான் படத்தின் கதையாக இருக்கும் என்று பலருக்கும் தோன்றுகிறது.