August 23, 2017
தண்டோரா குழு
சிம்புதேவன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் இம்சை அரசன்23ம் புலிகேசி.
இந்நிலையில் இரண்டாம் பாகமாக இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் சிம்புதேவன் இயக்க உள்ளார். வடிவேல் நாயகனான நடிக்கும் இப்படத்தை ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்தின் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று தான் இணையத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இப்படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக அஜித்தின் பில்லா -2 படத்தில் நடித்த நாயகி பார்வதி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.