• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடிவேலுக்கு வருது நடிக்க தடை? – பட அதிபர்கள் சங்கம் இறுதி கெடு

May 26, 2018 tmailsamayam.com

பட அதிபர்கள் சங்கம் வழங்கியுள்ள ஒரு வார இறுதி கெடுவுக்கு நகைச்சுவை நடிகர் பணியவில்லையெனில் படங்களில் நடிப்பதற்கு தடை வரக்கூடும் என கூறப்படுகிறது.

2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் வெளி வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க அதன் தயாரிப்பாளர்,முன்வந்தார்.

அந்த படத்தை இயக்கிய சிம்பு தேவன் இயக்க முடிவு செய்யப்பட்டு,வடிவேலுவுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் முன்பணமாக கொடுத்து நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.இப்படத்திற்கு பல கோடி செலவில் அரங்குகள் அமைத்து படபடப்பிடிப்பு தொடங்கியது.சில நாட்கள் மட்டும் நடந்த இந்த படப்பிடிப்புக்கு பின்,வடிவேலு சம்பள பிரச்னை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நடிக்க முடியாது என வடிவேலு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

படப்பிடிப்பு நின்றதால் அரங்குகள் பிரித்து விட்டனர்.இதனால் பல கோடி செலவு செய்தது வீணானதாகவும்,வடிவேலு தொடர்ந்து நடிக்க வலியுறுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திடம் ஷங்கர் முறையிட்டார். இதற்கு விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால்,அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என வடிவேலு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.இதுகுறித்து ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டதில் படத்துக்கு செலவழித்த 9 கோடியை வடிவேலு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என மற்றொரு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” படத்தில் தொடர்ந்து நடிக்க சம்மதிக்க வடிவேலுக்கு ஒரு வார கால கெடு விதிக்கப்பட்டுள்ளது. வடிவேலு மறுக்கும் பட்சத்தில்,அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க