June 10, 2017
தண்டோரா குழு
ஹரி, விக்ரம் கூட்டணியில் 2003ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சாமி. இந்த படத்தோட இரண்டாம் பாகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே கூட்டணியில உருவாகவிருக்கிறது.
சாமி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இரண்டாம் பாகதிற்கும் அவர் தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யபட்டார்.
இந்நிலையில், விக்ரம் இரண்டு கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கவுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.