December 4, 2018
தண்டோரா குழு
ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே வவிக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் உள்ளது. இந்நிலையில், ‘மஹாவீர் கர்ணா’ என்ற படத்தில் நடிகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி, தமிழ் என 2 மொழிகளில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. ஹிஸ்டாரிக்கல் பீரியட் படமான இதனை ‘யுனைடெட் ஃபிலிம் கிங்டம்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதற்கிடையில், நேற்று (டிசம்பர் 3-ஆம் தேதி) இந்த படத்துக்கான பூஜை போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஷூட்டிங் துவங்கப்படுமாம். படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.