May 31, 2017
தண்டோரா குழு
இருமுகன் படத்தை தொடர்ந்து விக்ரம்’வாலு’ பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே!
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்த நிலையில் செப்டம்பர்மாதம்இப்படம் வெளியிடப்படும்என்றுகூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் தற்போது பாபுராஜ் என்ற மலையாள நடிகர் இணைந்துள்ளார்.
இவர் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த அஜித் நடித்த ‘ஜனா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர். தற்போது 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.