August 23, 2017
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்றால் மற்றவர்கள் தங்களது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைப்பது தான் வழக்கம்.
ஆனால், சுசீந்திரன் தான் இயக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை ‘மெர்சல்’ வெளியாகும் அதே தினத்தில் வெளியிடுகிறார்.
இது குறித்து சுசீந்திரன் கூறும்போதும்,
“நாங்கள் மெர்சலுக்கு போட்டியில்லை, மெர்சலுடன் வருகிறோம், இப்படித்தான் ஆரம்பம் படத்துடன் பாண்டியநாடு ரிலிஸ் செய்தோம். அந்த இரண்டு படங்களுமே வெற்றியை அளித்தது” என்று கூறியுள்ளார்.இந்த தகவலை அவர் இணையத்தில் ஓர் கடித வடிவில் வெளியிட்டுள்ளார்.